கல்வி தொழிற்சாலைகள்
அன்புள்ள தமிழ் நெஞ்சங்களுக்கு,
புதுவை பழனி-ன் அன்பு வணக்கங்கள்.
ஆச்சரியபட வேண்டாம்.. இன்றைய வாழ்ககை சூழல் மிகவும் இயந்திரதனமாகிவிட்டது. மக்கள் அனைவரும் காலஓட்டத்தைவிட வேகமாக ஓடுகின்றனர். இந்த ஓட்டத்தில் மனிதம் மறைந்து மாயமாகிவிட்டது. இதில் மனிதன் எதிலும் திருப்தி காண்பதில்லை. பின் எதற்காக இவ்வளவு வேகமாக ஓடுகின்றhன். இதில் மாணவர்கள் பாடு படு கேவலமாக உள்ளது.
அதிலும் தனியார் பள்ளி மற்றும் கல்லுரி மாணவர்கள் கல்வியின் நோக்கத்தை மறந்து இல்லை இல்லை.. மறுத்து கல்வி தொழிற்சாலையில் பயில்கின்றனர். காலை 6 மணிக்கு கணவுகளை தியாகம் செய்து, துக்கத்திற்கு செயற்க்கையாக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்து மிருகதனமாக தயாராகி 7 மணிக்கு பஸ் ஏறி பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு 8 மணிக்குள் சென்று அடுத்த 9 மணி நேரம் என்ன படிக்கின்றேhம் என்று தெரியாமல் படித்து மீண்டும் வீட்டீற்கு வந்து வீட்டு பாடம் மற்றும் அஸைன்மன்ட் முடித்து பின்னர் டியுஷன் சென்று வந்து, டீவி பார்த்துகொண்டே சாப்பிட்டு படுப்பதற்கு 10 மணியாகிவிடுகிறது. டெஸ்ட் மற்றும் செமஸ்டர் எக்ஸhம் என சனிகிழமை கூட ஓய்வில்லாமல் ஆண்டுகள் ஓடுகின்றன. ஆணால் புரிதல் என்பது கேள்விகுறியாகிவிட்டது.
கல்வி தொழிற்சாலைகள் இனியாவது மார்க்கை மட்டும் குறி வைத்து கற்பிக்காமல் மனிதநேயத்தையும் கற்பிக்குமா...............
Friday, February 23, 2007
Subscribe to:
Posts (Atom)